நில அபகரிப்பு வழக்கு : திரைப்பட நடிகரும், தி.மு.க. பிரமுகருமான வாகை சந்திரசேகர், மனைவியுடன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரண்

Aug 19 2014 3:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக, திரைப்பட நடிகரும், தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளருமான வாகை சந்திர சேகர் தனது மனைவியுடன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள மாலையகவுண்டன்பட்டியில் கவுசல்யா என்பவருக்குச் சொந்தமான 3 ஏக்கர் 11 சென்ட் நிலத்தில், 38 சென்ட் நிலத்தை போலி பத்திரம் தயாரித்து சிலர் அபகரித்துக் கொண்டதாக, திண்டுக்கல் மாவட்ட நில அபகரிப்பு மீட்பு தனிப்படை போலீசில் கவுசல்யா புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் நிலத்தை அபகரித்ததாக கோவையைச் சேர்ந்த சுப்பம்மாள், மாலையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பாப்பம்மாள் மற்றும் முருகபாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடம் இருந்து நிலத்தை வாங்கிய மதுரை பகீரதன், உடந்தையாக இருந்த நடிகரும், தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளருமான வாகை சந்திரசேகர், அவரது மனைவி ஜெகதீஸ்வரி உள்ளிட்ட 11 பேர் மீது 6 பிரிவுகளின்கீழ் நில அபகரிப்பு தடுப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், நடிகர் சந்திரசேகர் தனது மனைவியுடன் இன்று திண்டுக்கல் நீதித்துறை நடுவர் திரு.முகமது சுலைமான்சேட் முன்னிலையில் சரணடைந்து ஜாமீன் உத்தரவை பெற்றுக்கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00