நாகை மாவட்டத்தில் நடைபெற்ற பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்பது குறித்த பயிற்சி முகாமில் 4 மாவட்ட விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்பு

Nov 1 2014 7:33AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நடைபெற்ற பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்பது குறித்த பயிற்சி முகாமில் 4 மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றவும், நிலத்தடி நீரை சேமிக்கவும் கடந்த ஆண்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வயல்களில் பண்ணைக் குட்டை அமைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி, தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் 15 ஆயிரம் பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நாகை மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்து 200 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குட்டைகளில் மீன் வளர்ப்பது குறித்து தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்ஒரு கட்டமாக, நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கன்னியாநத்தம் கிராமத்தில் பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பண்ணைக் குட்டைகளில் வளர்க்கப்படும் மீன் வகை மற்றும் மீன் வளர்ப்புக்குத் தேவையான மருந்து, உணவு உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் முறை குறித்து, துறை சார்ந்த வல்லுநர்கள் சிறப்புப் பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி தங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்ததாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00