தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்கள் அதிரடியாக கைது - போலீசார் தீவிர நடவடிக்கை

Jul 17 2014 11:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர், சுடலைமணி என்பவரை தொடர்புகொண்டு தங்களிடம் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் இருப்பதாகவும், அதற்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் போதும் என தெரிவித்தனர். இதனையடுத்து சாயல்குடி சென்ற சுடலைமணியிடம், கத்தியை காட்டி மிரட்டி அந்த கும்பல் பணத்தை பறித்துச் சென்றது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், 5 மணிநேரத்தில் குற்றவாளிகளான தனசேகர், தனபால், ஜெயகுமார் ஆகியோரை கைது செய்து, 5 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்ற காவலரை முன்விரோதம் காரணமாக கொலை செய்து, தலைமறைவாக இருந்த கண்ணன் என்பவரை, ராஜாக்கமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம் அருகே திருமணம் செய்து கொள்வதாக அழைத்து வந்து, கவுசல்யா என்ற பள்ளி மாணவியை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய கட்டடத் தொழிலாளியான அன்புதாஸ் என்பவரை அண்ணாமலைநகர் போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் மண்ணெண்ணெயை சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்ற 5 பேரை, உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் கைது செய்து, அவர்களது வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரியில், கடந்த 2010 ஆம் ஆண்டு, பெண் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர்கள் வெங்கடாஜலபதி, சரவணன் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கில், வெங்கடாஜலபதிக்கு 7 ஆண்டுகளும், சரவணனுக்கு 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து, நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00