இலங்கை ராணுவ இணையதளத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதற்கு கண்டனம் - தேசிய மனித உரிமை நுகர்வோர் உரிமை பாதுகாப்பு இயக்கம் சென்னையில் ஆர்ப்பாட்டம்

Aug 13 2014 3:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை ராணுவ இணையதளத்தில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து தேசிய மனித உரிமை நுகர்வோர் உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறித்து உண்மைக்கு மாறாக அவதூறு பரப்பும் வகையில், அண்மையில் இலங்கை ராணுவ இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு, இலங்கைக்கான இந்திய தூதரை அழைத்து, தனது கண்டனத்தை தெரிவித்தது. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், வழக்கறிஞர்கள் என பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, இலங்கை ராணுவ இணையதளத்தில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறித்த அவதூறு செய்தி வெளியிடப்பட்டதற்கு, அந்நாட்டு அதிபர் ராஜபக்சே மன்னிப்பு கோரினார். இந்நிலையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறித்து உண்மைக்கு மாறாக அவதூறு செய்தி பரப்பிய இலங்கை அரசைக் கண்டித்தும், இலங்கை அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், சென்னை சேப்பாக்கத்தில், தேசிய மனித உரிமை நுகர்வோர் உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00