செம்மண் குவாரி முறைகேடு மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, அதிகமாக சொத்து சேர்த்த வழக்குகள் : தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆஜராகாததைத் தொடர்ந்து விசாரணை ஒத்திவைப்பு

Jul 24 2014 4:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

செம்மண் குவாரி முறைகேடு மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்குகள், விழுப்புரம் நீதிமன்றங்களில் இன்று விசாரணைக்கு வந்தபோது, தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆஜராகாததையடுத்து, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

முந்தைய தி.மு.க. ஆட்சியின்போது, அமைச்சராக இருந்த பொன்முடி, செம்மண் குவாரி நடத்த உறவினர்களுக்கு அனுமதி வழங்கியதில், முறைகேடு காரணமாக 30 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு, விழுப்புரம் முதன்மை நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி உள்ளிட்ட 7 பேர் ஆஜரான போதிலும், பொன்முடி ஆஜராகவில்லை. இதனையடுத்து, விசாரணையை செப்டம்பர் மாதம் 4-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இதேபோல், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கு, விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, இவ்வழக்கில் குற்றம்சாட்டுள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவியும் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து, இவ்வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00