ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Feb 22 2020 2:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஊழல் வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீதரன் என்பவர், முன்ஜாமீன் கோரிய மனுவை விசாரிக்‍க திருவள்ளூர் மாவட்ட அமர்வு நீதிமன்றமும், சிறப்பு நீதிமன்றமும் மறுத்தது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீதரன் தாக்‍கல் செய்த மனுவில், தனது முன்ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்‍கை விடுத்தார். இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்‍கு வந்தது. அப்போது, ஊழல் வழக்குகளை விசாரிக்க மட்டுமே சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களின் முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்க அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும், மனுதாரர் திருவள்ளூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00