விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு : பல்லடத்தில் கண்டன பொதுக்கூட்டம்

Feb 28 2020 9:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மின் புனரமைப்பு கழகமும், பவர்கிரிட் நிறுவனமும் இணைந்து, உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை, 13 மாவட்டங்களில் செயல்படுத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்லடம் என்.ஜி.ஆர் சாலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கூட்டமைப்பு சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், திருப்பூர், கரூர், நாமக்கல் உட்பட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், உயர்மின் கோபுரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டது. உயர்மின் கோபுரத்தின் கீழ் நிற்க வைத்து, வெறும் கைகளில் மின் விளக்குகளை கொடுத்தபோது அவை மிளிர்ந்ததோடு, உடலில் "டெஸ்டரை" வைத்து சோதனையிட்டபோது, மின்சாரம் பாய்வது உறுதி செய்யப்பட்டது. உயர்மின் கோபுரங்களின் பக்கவாட்டில் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு மின்காந்த அலைகளின் தாக்கம் இருப்பதாக, உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00