இந்திய அளவில் சென்னை அண்ணா பல்கலைக்‍கழகத்திற்கு 5வது இடம் - 2020-21ம் ஆண்டுக்‍கான உயர்கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியல் வெளியீடு

May 28 2020 4:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

2020-21ம் ஆண்டுக்‍கான உயர்கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலில், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், இந்திய அளவில் 5-வது தலைசிறந்த உயர் கல்வி நிறுவனம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

ஆண்டுதோறும் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மாணவர்கள், பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் உள்ளிட்டவர்களிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, Education world என்ற அமைப்பு தரவரிசைப்பட்டியல் வெளியிடும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்திலேயே தலைசிறந்த உயர் கல்வி நிறுவனமாக அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவில் முதலிடத்தில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் இடம்பெற்றுள்ளது. 2-ம் இடத்தை டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகமும், 3-வது இடத்தை டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழகமும், 4-ம் இடத்தை டெல்லி பல்கலைக்கழகமும் பிடித்துள்ளன. நாடு முழுவதும் உள்ள 162 உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 214 பேராசிரியர்கள், ஆயிரத்து 126 மாணவர்கள், 828 தொழில் பிரதிநிதிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சிறந்த உயர்கல்வி, கற்றல், கற்பித்தல், பாடத்திட்டம், வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் ஆகிய 10 அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00