மதுரை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க ஆயிரத்து 722 தெருக்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை : அத்தியாவசிய பொருட்களை வீடு தேடி வழங்க ஏற்பாடு

Jul 10 2020 11:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க ஆயிரத்து 722 தெருக்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தொற்று கண்டறியப்பட்ட 1,722 தெருக்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான காய்கறி, மளிகை, பால் மற்றும் மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொடுக்க அந்தந்த தெருக்களில் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையில் ஊழியர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டோரைக் கண்டறியும் விதமாக 95 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நோயால் பாதிக்கப்பட்டவர்களை கணக்கெடுத்து, தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் 'மைக்ரோ ப்ளான்' திட்டத்தை தொடங்கியுள்ளது. 3 பேருக்கு குறைவாக கண்டறியப்பட்ட தெருக்கள், 3 முதல் 4 பேர் வரை மற்றும் 5 நபர்களுக்கு மேல் பாதிப்பு கண்ட தெருக்கள் கணக்கெடுக்கப்பட்டு, அப்பகுதியில் இருந்து மக்கள் மற்றொரு பகுதிக்குச் செல்லாதவாறு மாநகராட்சி அப்பகுதிகளை தடைசெய்து வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00