திருப்பூரில் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு

Jul 13 2020 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அரியவகை 20 கல்வட்டங்கள் கண்டுபிடிக்‍கப்பட்டுள்ளன.

இறந்தவர்களை அடக்கம் செய்த பின்பு அந்த சமாதி மீது 10-அடி சுற்றளவுக்‍கு கற்கள் நட்டு வைப்பார்கள். இந்தக் கற்கள் ஒவ்வொன்றும் சராசரியாக நுாறு முதல் 150 கிலோ வரை எடை இருக்கும். இதுபோல் வட்ட வடிவத்தில் கற்கள் நிறுத்தி அடையாளம் ஏற்படுத்துவதை அன்றைய காலத்தில் 'கல்வட்டம்' என அழைத்தனர். கல்வட்டங்கள் குறித்து உடுமலையில் வரலாற்று ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மெட்ராத்தி பகுதியில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு கூறும் அரியவகை அடையாளமாக 20-க்‍கும் மேற்பட்ட கல்வட்டங்கள் காணப்படுகின்றன. தொடர்ந்து இந்த பகுதியை தமிழக அரசு ஆய்வு செய்யும் போது, ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி போன்று பல அரிய வரலாற்று தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00