பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடி குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு

Aug 12 2020 4:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடி குறித்து விரிவான விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவதாகவும், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு அடிப்படையில், மதிப்பெண்கள் அளிக்கப்படும் எனவும், தமிழக அரசு அறிவித்தது. இதனடிப்படையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இதில், 5 ஆயிரத்து 177 மாணவர்களின் தேர்வு முடிவுகள் விடுபட்டிருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை, தேர்வு எழுத பதிவு செய்தபின் 231 மாணவர்கள் மரணமடைந்து விட்டதாகவும், 658 மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் பெற்று பள்ளியை விட்டு இடை நின்றுவிட்டதாகவும், 4 ஆயிரத்து 359 மாணவர்கள், அரையாண்டு மற்றும் காலாண்டு தேர்வு எழுதாமலும், பள்ளிக்கு வராமலும், நின்று விட்டதாக தெரிவித்தது. அப்படியானால், இந்த மாணவர்களுக்கு எவ்வாறு ஹால் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டது என கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்த குளறுபடி குறித்து விரிவான விசாரணை நடத்த, அரசு தேர்வுகள் துறைக்கு பள்ளிக்கல்வித் துறை ஆணையர் திரு.ஜார்ஜ் தாமஸ் வைத்யன் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00