தேனியில் பலவீனமான இணைய சேவை - ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதில் சிரமம் : மரக்கிளைகளில் அமர்ந்து வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள்

Aug 14 2020 6:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே, இணைய சேவை முறையாக கிடைக்காததால், மரத்திலும், மொட்டை மாடி தடுப்பிலும் அமர்ந்து, மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவ, மாணவிகளுக்கு இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இணைய சேவை முறையாக இல்லாததால், மலைக்‍ கிராமங்களிலும், கிராமப்புறங்களிலும் உள்ள மாணவர்கள், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போன் இல்லாததால், மன அழுத்தத்திற்கு ஆளாகி, மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலமும் நிகழ்ந்து வருகிறது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ரெங்கநாதபுரத்தில், நெட்வொர்க் சரியாக இல்லாததால், மாணவர்கள் மொட்டைமாடியின் தடுப்பு சுவரில் நின்றும், மரக்கிளைகளில் அமர்ந்தும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கின்றனர். ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால், பள்ளிப்பாடங்களை படிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், தங்களது சிரமத்தை போக்க, புதிய செல்போன் டவர் அமைத்துத்தர வேண்டும் எனவும் அப்பகுதி மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00