மழலைக்‍குரலில் தேசியக்கொடிகளின் பெயர்களை பட்டியலிடும் குழந்தை - உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற முயற்சி

Oct 31 2020 3:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையைச் சேர்ந்த 3 வயது குழந்தை, உலக நாடுகளில் உள்ள தேசியக்‍கொடிகளின் பெயர்களை மூச்சுவிடாமல் மூன்றே நிமிடத்தில் கூறி சாதனை படைத்துள்ளது.

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் - சுகன்யா தம்பதியரின் 3 வயது பெண் குழந்தை ஆரண்யா அதிக நினைவாற்றலுடன் காணப்படுகிறாள். ரங்கநாதன், சுகன்யா இருவரும் பணிக்‍குச் செல்லும் நிலையில், ஆரண்யா தனது பாட்டி-தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறாள். ஆரண்யாவிடம் அதீத திறமை இருப்பதை உணர்ந்த அவளது பெற்றோர், பொது அறிவு சார்ந்து அதிக அளவில் கற்றுக்‍கொடுத்துள்ளனர். இதன் பயனாக, தற்போது மூன்றே நிமிடத்தில், உலக நாடுகளில் உள்ள 235 தேசியக்‍கொடிகளின் பெயர்களை மழலைமாறாமல் பட்டியலிடுகிறாள் ஆரண்யா. ஆரண்யாவின் இந்த முயற்சியால் வியப்படைந்த பெற்றோர், இவளது திறமையை சாதனையாக அங்கீகரிக்‍க வேண்டுமென உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00