அ.ம.மு.க. நிர்வாகிகளின் கருத்துக்‍ கேட்புக்‍ கூட்டங்கள் : தேர்தல் பணிகளை தொடங்க கழக நிர்வாகிகளுக்‍கு அறிவுறுத்தல்

Dec 1 2020 2:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்த ஆய்வு மற்றும் கழகத் தேர்தல் அறிக்‍கை தொடர்பான கருத்துக்‍ கேட்புக்‍ கூட்டங்கள், அம்மா மக்‍கள் முன்னேற்றக கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தலின்பேரில், தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தென்சென்னை வடக்‍கு மாவட்டக்‍ கழகச் செலாளர் திரு.வ.சுகுமார்பாபு தலைமையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்த ஆய்வு மற்றும் கழக தேர்தல் அறிக்‍கை தொடர்பான கருத்துக்‍கேட்புக்‍ கூட்டம், அண்ணாநகர் சட்டமன்ற தொகுதிக்‍கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாண்புமிகு அம்மா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரின் திருவுருவப் படங்களுக்‍கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்ட பின்னர் நடைபெற்ற இந்தக்‍ கூட்டத்தில், அனைத்து தொகுதிகளிலும் கழகத்தினர் வெற்றிபெற தீவிர தேர்தல் பணி ஆற்ற வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.

இக்‍கூட்டத்தில், கழக கொள்கைபரப்புச் செயலாளர் செல்வி சி.ஆர்.சரஸ்வதி, கழக அமைப்புச் செயலாளர் திரு.ஆர்.சுந்தர்ராஜ், கழக பொறியாளர் அணி செயலாளரும், செங்கல்பட்டு வடக்‍கு மாவட்ட கழகச் செயலாளருமான திரு.ம.கரிகாலன், கழக மாணவர் அணிச் செயலாளர் திரு.பரணீஸ்வரன், கழக செய்தித்தொடர்பாளர் திருமதி எம்.ஆர்.ஜெமிளா, பகுதிக்‍கழகச் செயலாளர்கள் திரு.கே.என்.குணசேகரன், திரு.எல்.ராஜேந்திரன், வழக்‍கறிஞர் வி.பாபு, திரு.எஸ்.ஏழுமலை, கழக பொதுக்‍குழு உறுப்பினர்கள் திருமதி சித்ராதேவி, திரு.எஸ்.அமிர்அலி, திரு.வி.துரைசாமி, திரு.பி.டி.சி. கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00