நீலகிரி மாவட்டம் முதுமலையில் முதுகில் ஏற்பட்ட காயத்தால் உயிருக்கு போராடி வரும் காட்டு யானைக்கு தீவிர சிகிச்சை

Dec 2 2020 4:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டம் முதுமலையில், முதுகில் ஏற்பட்ட காயத்தால் உயிருக்கு போராடி வரும் காட்டு யானைக்கு, பழங்களில் மருந்து கலந்து கொடுத்து, வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொக்காபுரம் வனப்பகுதியில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை, முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக, ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது. வனத்துறை ஊழியர்கள் மூலம் தகவல் அறிந்த புலிகள் காப்பக வெளிமண்டல கள இயக்குனர் ஸ்ரீகாந்த் உத்தரவின்பேரில், அந்த யானைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக, யானை விரும்பி உண்ணக்கூடிய தர்பூசணி, வாழை, பலா உள்ளிட்ட பழங்களில், காயத்தை குணமாக்கக் கூடிய மருந்துகளை கலந்து கொடுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. யானையை தொடர்ந்து கண்காணிக்க தனி குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 3 நாட்களுக்கு இதேபோல் மருந்துகள் வழங்கப்படும். யானை குணமடையாவிட்டால், மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்கவும், வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00