தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்த முன்களப் பணியாளர்கள் - கன்னியாகுமரி அருகே நடைபெற்ற நிகழ்வால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி

Jan 17 2021 11:14AM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையிலுள்ள பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்ட முன்களப் பணியாளர்களில் ஒருவர் கூட தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக 86 முன்களப் பணியாளர்கள் தேர்தெடுக்கப்பட்டனர். கொரோனா தடுப்பூசி போடும் பணிகள், நாடு முழுவதும் நேற்று தொடங்கிய நிலையில், பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 86 பேரில் ஒருவர் கூட தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை. எனினும், அதே மருத்துவமனையில் மின்சாதன பழுதுப் பிரிவில் பணியாற்றும் ராஜேஷ் என்பவர் தாமாக முன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டார். மருத்துவப் பணியாளர்களே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டாதது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00