அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு

Jan 17 2021 5:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.ம.மு.க தலைமை அலுவலகத்தில், கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, துணைத்தலைவர் திரு.எஸ். அன்பழகன் சந்தித்து, தனது மகளின் திருமண விழாவில் கலந்துகொள்ளுமாறு அழைப்பிதழ் வழங்கினார்.

கழக ஆட்சி மன்றக்‍குழு தலைவராக நியமிக்‍கப்பட்டுள்ள திரு.R.R. முருகன் தலைமையில், குழு உறுப்பினர்கள் ஆம்பூர் திரு.ஆர்.பாலசுப்பிரமணி, திரு.K. டேவிட் அண்ணாதுரை, திரு.எம்.கோதண்டபாணி, திரு.அப்துல் நபில் உள்ளிட்டோர், திரு. டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளர் திரு.டி.கே.ராஜேந்திரன், கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு.காந்தி கணேஷ் தலைமையில், சென்னை மாவட்ட தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு.ராஜசேகர், கொளத்தூர் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் திரு.தினேஷ்குமார், கொளத்தூர் தொகுதி பொருளாளர் திரு.சண்முகப்பிரியன் உள்ளிட்டோர், கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் முன்னிலையில், தங்களை கழகத்தில் இணைத்துக்‍கொண்டனர்.

கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை, வடசென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் திரு.வெற்றி நகர் சுந்தர் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00