தியாகத்தலைவி சின்னம்மா விடுதலை அறிவிப்பு - அ.ம.மு.க.வினர் கொண்டாட்டம் - பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி

Jan 20 2021 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
தியாகத்தலைவி சின்னம்மா விடுதலை அறிவிப்பைத் தொடர்ந்து, அ.ம.மு.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

தென்காசி வடக்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில், மாவட்டச் செயலாளர் திரு.பொய்கை சோ.மாரியப்பன் தலைமையில் கழகத்தினர் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். மாவட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதி அ.ம.மு.க சார்பில், பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கழகத்தினர் கொண்டாடினர். அம்மா பேரவை இணைச் செயலாளர் திரு.வி.பி.ஆர். சுரேஷ், மாவட்ட அம்மா பேரவை தொழிற்சங்க செயலாளர் திரு.துரையரசன் பகுதிச் செயலாளர் திரு.கோட்டாள தாளமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மத்திய மாவட்ட அ.ம.மு.க சார்பில், மாவட்டச் செயலாளர் திரு.G. சாமிக்களை தலைமையில், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிவகாசி செங்கமலநாச்சியார்புரத்தில் உள்ள அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனைத்தொடர்ந்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில் தக்கலையில், மேற்கு மாவட்ட செயலாளர் திரு.ஜெங்கின்ஸ் தலைமையில், கழக நிர்வாகிகள் ஊர்வலமாகச் சென்று, பட்டாசு வெடித்து, பொமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் திரு.சௌந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், கூவத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி ஆலயத்தில், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகத்தினர் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டனர். இலத்தூர் ஒன்றியச் செயலாளர் திருவாதுர் திரு.பாரதி பாபு தலைமையில், பொதுமக்‍களுக்‍கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஒன்றியக்‍கழக நிர்வாகிகள், கூவத்தூர் ஊராட்சிக்‍கழகச் செயலாளர் திரு.மோகன் ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தியாகத்தலைவி சின்னம்மாவுக்‍கு வரவேற்பு அளிப்பது குறித்து மயிலாடுதுறை மாவட்ட அ.ம.மு.க சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை, செம்பனார்கோவில், சீர்காழி, கொள்ளிடம், குத்தாலம் ஆகிய ஒன்றியக்‍கழகச் செயலாளர்கள், மயிலாடுதுறை, சீர்காழி நகரக்‍ கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00