மசினகுடி பகுதியில் காட்டு யானைக்கு தீ வைத்த சம்பவம் : மத்திய யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் நேரில் ஆய்வு

Jan 25 2021 9:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

உதகை அருகே மசினகுடி பகுதியில் காட்டு யானைக்கு தீ வைத்த சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, மத்திய வனம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சகம் நியமித்துள்ள ஒரு நபர் குழு சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே மசினகுடி பகுதியில் 50 வயது மதிக்கதக்க ஆண் காட்டு யானை, காது மற்றும் முதுகில் ஏற்பட்ட தீ காயத்தால் பரிதாபமாக உயிரிழந்தது. யானைக்கு தீ வைத்த 2 பேர் கைது செய்யபட்டனர். இந்த நிலையில் யானைக்கு தீ வைத்த சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மத்திய வனம் மற்றும் சுற்று சூழல் அமைச்சகம், மத்திய யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் முத்தமிழ் செல்வனை அனுப்பி உள்ளது. மசினகுடிக்கு வந்த அவர், சம்பவம் நடைபெற்ற மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியில் ஆய்வு செய்ததுடன் சம்பத்தன்று பணியில் இருந்த வேட்டை தடுப்பு காவலர்களிடம் விசாரணை நடத்தினார். அத்துடன் பொதுக்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். விரைவில் தனது விரிவான அறிக்கையை மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகத்தில் சமர்ப்பிக்கபடும் என்று அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00