மதுரையில் உள்ள கக்கன்ஜீ மணிமண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் மரியாதை
Jun 18 2021 3:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தியாகசீலர் கக்கன்ஜீயின் 112-வது பிறந்தநாள் விழாயையொட்டி மதுரையில் உள்ள அவரது நினைவு மணிமண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் திரு. அனிஷ்சேகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தும்பைபட்டியில் உள்ள மணிமண்டபத்தில் அமைந்துள்ள கக்கன்ஜியின் திருவுருவ சிலைக்கு தமிழக அரசின் சார்பில் வணிகவரித்துறை அமைச்சர் திரு. மூர்த்தி உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கொரோனா ஊரடங்கு காரணமாக அரசியல் கட்சிகளுக்கோ, பொதுமக்களோ மரியாதை செலுத்த அனுமதி மறுக்கப்பட்டது.