அரசு நிலங்களில் சட்டவிரோத கட்டுமானங்கள் உருவாகாமல் தடுக்‍க நடவடிக்‍கை எடுக்‍கவேண்டும் - தமிழக அரசுக்‍கும் சென்னை மாநகராட்சிக்‍கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Sep 17 2021 5:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரசு நிலங்களில் சட்டவிரோத கட்டுமானங்கள் உருவாகமல் இருக்க தமிழக அரசும், மாநகராட்சியும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் மாநகராட்சி அனுமதியின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை அகற்ற உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சட்டத்தை உருவாக்குபவர்களே அதை கையில் எடுத்து செயல்பட முடியாது என கண்டனம் தெரிவித்து, சட்டமன்ற அலுவலகத்தில் கட்டப்பட்டு வரும் சட்டவிரோத கட்டுமானத்தை உடனடியாக இடிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ்பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படி கட்டிடம் இடிக்கப்பட்டுவிட்டதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், எதிர்காலத்தில் இதுபோன்ற சட்டவிரோத கட்டுமானங்கள் உருவாகமல் தடுக்க தமிழக அரசும், மாநாரட்சியும் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00