இரும்பு கம்பியில் தொங்கியபடி சாதனை புரிந்த 4 வயது சிறுமி : 70 மீட்டர் தூரத்தை 87 வினாடிகளில் கடந்து அசத்தல்

Dec 16 2021 4:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் 70 மீட்டர் தூரத்தை 87 வினாடிகள் இரும்பு கம்பியில் தொங்கியபடி கடந்து 4 வயது சிறுமி சாதனை படைத்துள்ளார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே மணக்குடியான் இருப்பு கிராமத்தைச் சேர்ந்த மோகன் - சத்யா தம்பதியினரின் 4 வயது மகள் அனுஸ்ரீ, வீட்டில் உள்ள மரம் ஏறுதல், மரக் கிளைகளில் தாவி செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர். இதனை பார்த்த சோழன் உலக சாதனை புத்தகம் நிறுவனம், சிறுமியின் செயலை சாதனை புத்தகத்தில் இடம்பெறும் செய்ய ஏற்பாடு செய்தனர். அதன்படி, சிதம்பரம் காசுக்கடை தெருவில் உள்ள பள்ளியில் நிகழ்ச்சியில், 87 வினாடிகள் இரும்பு கம்பியில் தொங்கியபடி 70 மீட்டர் தூரத்தை கந்து சென்று சிறுமி அனுஸ்ரீ சாதனை புரிந்தார்.

இதனையடுத்து, சோழன் உலக சாதனை புத்தகம் நிறுவனம் சார்பில், சிறுமி அனுஸ்ரீக்கு பதக்கம் அணிவித்து சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00