தமிழக அமைச்சர்கள் மூர்த்தி, ராமச்சந்திரனுக்‍கு கொரோனா தொற்று - காவல்துறையில் 18 எஸ்.பி.க்‍களுக்‍கு கொரோனா பாதிப்பு

Jan 21 2022 3:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக அமைச்சர்கள் திரு.மூர்த்தி, திரு.ராமச்சந்திரனுக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்‍குநாள் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்பு நேற்று ஒரே நாளில் 28 ஆயிரத்தைக்‍ கடந்து பதிவாகியுள்ளது. இந்நிலையில், வணிக வரித்துறை அமைச்சர் திரு.மூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அமைச்சர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்‍ கொண்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதேபோல், வனத்துறை அமைச்சராக உள்ள திரு.ராமச்சந்திரனுக்‍கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் காரணமாக, குன்னூரில் உள்ள தனது வீட்டில் அவர் தனிமைப்படுத்திக்‍ கொண்டுள்ளார்.

இதனிடையே, தமிழக காவல்துறையில் 18 எஸ்.பி.க்‍கள் கொரோனா தொற்றால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். டி.ஜி.பி. முதல் ஐ.ஜி. வரையிலான பதவிகளில் உள்ள அதிகாரிகளில் 6 அதிகாரிகளுக்‍கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் தமிழக காவல்துறையில் 328 பேர் தொற்றால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். 3வது அலையில் இதுவரை, 2 ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள் தொற்றால் பாதிக்‍கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00