மயிலாடுதுறை அருகே வீரசோழன் ஆற்றில் கழிவு நீர் கலப்பதற்கு கண்டனம் : ஆற்றில் தலைகீழாக நின்று இளைஞர் போராட்டம்

May 26 2022 4:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

மயிலாடுதுறை அருகே வீரசோழன் ஆற்றில் சாக்கடை நீர் கலப்பதைக் கண்டித்து, இளைஞர் ஒருவர் ஆற்றின் உள்ளே தலைகீழாக நின்று போராட்டம் நடத்தினார்.

காவிரியாற்றின் கிளை ஆறுகளில் ஒன்றான வீரசோழன் ஆறு மயிலாடுதுறை மாவட்டத்தின் வழியே கடலில் கலக்கிறது. 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி மற்றும் வடிகால் வசதி அளிக்கும் முக்கிய ஆறான வீரசோழன் ஆற்றில், சங்கரன்பந்தல் என்ற இடத்தை சுற்றியுள்ள 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளின் கழிவு நீர் முழுவதுமாக திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி பலவித நோய்கள் ஏற்படுவதுடன், நிலத்தடி நீரும் சாக்கடை நீராக மாறி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைக்‍ கண்டித்து, அப்பகுதியின் வடக்குத் தெருவைச் சேர்ந்த கதிரவன் என்ற இளைஞர், ஆற்றின் உட்பகுதியில் தலைகீழாக சிரசாசனம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டார். வீரசோழன் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்‍க நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என்றும், ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00