உசிலம்பட்டி பூச்சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார்

May 26 2022 5:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பூச்சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகக்‍கூறி, பூ வியாபாரிகள், பூக்‍களை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி சந்தைத் திடல் பகுதியில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளை அளவீடு செய்து வாடகைக்‍கு விடுவதற்கு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், பூமார்க்கெட் பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை வசதி சாக்கடை வசதி செய்து கொடுக்க கடை ஒன்றிற்கு தலா ரூ30 ஆயிரம் வீதம் இலஞ்சம் கேட்பதாகவும் இதனைக் கண்டித்தும் கடை மறுவாடகைக்கு விடுவதைக் கண்டித்தும் பூவியாபாரிகள் பூக்களை தேனி ரோட்டில் சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த போலிசார் பூ வியாபாரிகளிடம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்து போகச் செய்தனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00