கடலூர் புதிய பேருந்து நிலையத்தை அமைச்சரின் குறிஞ்சிப்பாடி தொகுதிக்‍கு மாற்றம் செய்வதற்கு அமமுக கண்டனம் - முடிவைத் திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று முழக்‍கம்

May 28 2022 12:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூரில் அடிக்‍கல் நாட்டப்பட்ட பேருந்து நிலையத்தை, அமைச்சரின் குறிஞ்சிப்பாடி தொகுதிக்‍கு கொண்டு செல்லும் தி.மு.க. அரசைக்‍‍ கண்டித்து, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்‍கணக்‍கானோர் கலந்து கொண்டு கண்டன முழக்‍கங்களை எழுப்பினர்.

கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் அமையவிருந்த பேருந்து நிலையத்தை நகருக்‍கு வெளியே சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்‍க தி.மு.க அரசு முயற்சித்து வருவதைக்‍ கண்டித்து, அ.ம.மு.க. சார்பில், இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ‍கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவித்திருந்தார்.

அதன்படி, கடலூர் பேருந்து நிலையத்தை குறிஞ்சிப்பாடி தொகுதிக்‍கு கொண்டு செல்ல முயற்சிக்‍கும் தி.மு.க அரசைக்‍ கண்டித்து, கடலூர் ஜாம்பவான் அருகே, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், கழக துணை பொது செயலாளர்கள் திரு. N. ரங்கசாமி, திரு. G. செந்தமிழன், மண்டல பொறுப்பாளர் திரு. R. பாலசுந்தரம், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆடிட்டர் திரு.N. சுந்தரமூர்த்தி, வடக்கு மாவட்ட செயலாளர் திரு.அக்ரி P.முருகேசன், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திரு. R. மோகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் பொதுமக்‍களும் திரளான பங்கேற்றனர். பேருந்து நிலையத்தை மாற்றும் முடிவை தி.மு.க அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் முழக்‍கமிட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00