கூட்டுறவு பதிவாளரின் சுற்றிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு

Jul 1 2022 4:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

கூட்டுறவு வேளாண்மை கடன் சங்க தலைவர்கள் கையொப்பமிட்டு வழங்கப்படும் காசோலைகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று கூட்டுறவு பதிவாளரின் சுற்றிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முதுகுளத்தூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை சங்கத்தின் தலைவர் சங்கரபாண்டியன், உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் அதன் உறுப்பினர்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் இதர பணப்பரிமாற்றம் செய்வதற்கு காசோலை வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த பணப் பரிவர்த்தனைக்கு கூட்டுறவு சங்கங்களின் தலைவர் கசோலையில் கையெப்பம் இடும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது என்றும், கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி, கூட்டுறவு பதிவாளர் வெளியிட்ட அறிக்‍கையின்ப​டி, சங்கங்களின் தலைவர் காசோலையில் கையொப்பமிடும் அதிகாரம் ரத்து செய்யப்பட்டது என்றும், உள்நோக்கத்துடன் இந்த சுற்றிக்கை வெளியிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். இந்த மனு நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்‍குப் பின்னர் மாநில பதிவாளர் சுற்றிக்கைக்கு நீதிபதி இடைக்கால தடை விதித்தார். மேலும் வழக்கு குறித்து பதில் அளிக்‍குமாறு மாநில கூட்டுறவு பதிவாளருக்‍கு உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00