திருவாரூரில் மருந்துக்கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய வாடிக்கையாளர் - மருத்துவரின் பரிந்துரையின்றி தூக்க மாத்திரை கொடுக்காததால் வெறிச்செயல்

Aug 5 2022 6:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் உள்ள மருந்துக்கடையில் தூக்க மாத்திரை கேட்டு அடாவடியில் ஈடுபட்ட வாடிக்கையாளர் ஒருவர், கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடவாசல் பேரூராட்சி அலுவலம் எதிரே ரவி என்பவருக்கு சொந்தமான மருந்துக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு சென்ற செந்தில் என்பவர், மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துச்சீட்டு இன்றி போதைக்காக குறிப்பிட்ட தூக்க மாத்திரையைக் கேட்டுள்ளார். அதற்கு கடை உரிமையாளர் ரவி, மன நோயாளிகளுக்காக வழங்கப்படும் இத்தகைய மாத்திரையை மருத்துவர் பரிந்துரையின்றி யாருக்கும் தரமுடியாது எனக்கூறி திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில் தனது நண்பர் இமையன் என்பவருடன் மருந்துகடைக்கு சென்று ரவியை சரமாரியாக தாக்கினார். இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரவி அளித்த புகாரின் பேரில் குடவாசல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00