மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வீசி வரும் பலத்த சூறை காற்று : தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை - இழப்பீடு வழங்க கோரிக்கை

Aug 6 2022 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் 5வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் பகுதியில் தொடர்ந்து பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதன்காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்களும், நாட்டுப் படகு மீனவர்களும் இன்று ஐந்தாவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், மீனவர்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல், ராமேஸ்வரம் மீனவர்கள் 5வது நாளாக இன்றும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாததால் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத நாட்களில் மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை கடற்கரை பகுதிகளில் புயலின் சீற்றம் அதிகமாக இருப்பதாலும், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாலும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. கடந்த 5 நாட்களாக கடலில் புயலின் சீற்றம் அதிகமாக இருப்பதால் கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00