மக்‍களவையில் கடும் எதிர்ப்புக்‍கு இடையே தாக்‍கல் செய்யப்பட்ட மின்சார சட்டத்திருத்த மசோதா - நாடாளுமன்ற நிலைக்‍குழுவுக்‍கு அனுப்பி வைப்பு

Aug 8 2022 1:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்‍களவையில் கடும் எதிர்ப்புக்‍கு இடையே தாக்‍கல் செய்யப்பட்ட மின்சார சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்ற நிலைக்‍குழுவுக்‍கு அனுப்பிவைக்‍கப்பட்டது.

மத்திய மின்துறை அமைச்சர் திரு.ஆர்.கே.சிங் மக்களவையில் இன்று மின்சார சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்‍கு காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்‍கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவையிலிருந்து வெளிநடப்பு செய்தன. இதையடுத்து மின்சார சட்டத்திருத்த மசோதாவை மக்‍களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா நாடாளுமன்ற நிலைக்‍குழுவுக்‍கு அனுப்பிவைத்தார்.

மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது, உள்ளிட்டவற்றுக்‍கு மின்சார சட்டத்திருத்த மசோதா வழிவகுக்‍கிறது. உற்பத்தி செலவுக்கு இணையாக கட்டணம் இருந்தால், விநியோக நிறுவனங்களை சிறப்பாக நடத்த முடியும் என மத்திய அரசு மசோதாவில் குறிப்பிட்டுள்ளது. மானியத்தை கணக்கில் கொள்ளாமல் மின் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது இந்த சட்டத் திருத்த மசோதாவின் முக்கிய அம்சமாக உள்ளது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00