சர்வதேச விமான நிலையத்திற்கு தேவையான இடத்தை தமிழக அரசு ஒதுக்கவில்லை : பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு

Sep 23 2022 10:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் சர்வதேச விமான நிலையத்திற்கு தேவையான இடத்தை தமிழக அரசு ஒதுக்கவில்லை என்று பாஜக தேசிய தலைவர் திரு. ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை மற்றும் காரைக்குடியில் பாஜக சார்பில் நடைபெறும் பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து விரகனூர் சுற்றுச்சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற பல்துறை தொழில் வல்லுனர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை நாட்டில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற 633 புள்ளி ஒன்று ஏழு ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கேட்டதாகவும், தமிழக அரசு 543 ஏக்கர் நிலத்தை மட்டுமே கொடுத்துள்ளது எனவும் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ஆயிரத்து 264 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 95% பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், மாணவர் சேர்க்கை இடங்களும் 100-ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00