தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அரசு நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்தவேண்டும் : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தல்

Sep 23 2022 1:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அரசு நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்த வேண்டும் என்றும், மைதானத்தை சேதப்படுத்தவோ, அங்கு இருக்கும் மரங்கள் வெட்டவோ அதிகாரம் இல்லை என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தி உள்ளது.

தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியின் மைதானத்தில் கூட்டங்களை நடத்துவதற்கோ, தற்காலிக வாகன நிறுத்தமாக பயன்படுத்துவதற்கோ அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட கோரி தஞ்சையை சேர்ந்த சங்கர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, நிகழ்வுகளை நடத்துவதற்காக அனுமதி பெற்றால் மைதானத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், அங்குள்ள மரங்களை வெட்டவோ, அங்கு இருக்கும் கட்டமைப்புகளை சேதப்படுத்துவதற்கோ எவ்வித அதிகாரமும் இல்லை என்றும் தெரிவித்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மைதானம் அரசு நிகழ்ச்சிகளை நடத்த மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், மைதானத்தை சேதப்படுத்துவதும், அங்கு இருக்கும் மரங்களை வெட்டுவதும் நடைபெறாது என்றும் உறுதி அளித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00