திருவண்ணாமலையைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலும் குடிநீர் வழங்கும் திட்டத்தில் முறைகேடு - வானூர் அருகே குடிநீர் பைப் லைன் அமைக்காமலேயே டம்மி பைப் வைத்து ஏமாற்றியது அம்பலம்

Nov 25 2022 8:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலையைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலும் குடிநீர் வழங்கும் திட்டத்தில் டம்மி குழாய்களை பதித்து மோசடி நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அண்மையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் போலியாக குழாய்கள் பதிக்கப்பட்டு மோசடி நடைபெற்று இருப்பதை நமது ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது. தற்போது அதே போன்ற மேலும் ஒரு மோசடி விழுப்புரம் மாவட்டத்திலும் அரங்கேறியுள்ளது தெரிய வந்துள்ளது.

வானூர் அடுத்த ஒழிந்தியாம்பட்டு கிராமத்தில் 15-வது மாநில நிதிக் குழு மான்ய திட்டத்தின் கீழ் 752 மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதித்து 40 குடிநீர் குழாய்கள் பதிக்‍க 3 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், ஊராட்சி மன்றத் தலைவரான திமுகவைச் சேர்ந்த சுலோச்சனா மற்றும் அவரது மகன் சக்திவேல் ஆகியோர் 40 சிமெண்ட் கற்களை நட்டு வைத்து அதில் டம்மி குழாய்களை மட்டும் பதித்து வைத்து விட்டு குடிநீர் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிவிட்டதாக கணக்கு காட்டியுள்ளனர்.

ஒப்புக்கு நட்டு வைக்கப்பட்ட சிமெண்ட் கற்களையும், மண்ணில் புதைக்கப்பட்டிருந்த வெற்றுக்‍ குடிநீர் குழாய்களையும் பிடுங்கி வெளியே எடுத்து இந்த மோசடியை ஒழிந்தியாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வெளிக்‍கொணர்ந்துள்ளனர். இதனால் ஜல் ஜீவன் திட்டத்தை திமுக அரசு உண்மையிலேயே முழுமையாக செயல்படுத்துகிறதா என்கிற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00