மத மோதலை ஏற்படுத்தும் வகையில் டிவிட்டரில் கருத்து பதிவிட்டதாகப் புகார் - இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது 2 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு

Dec 7 2022 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்து மக்கள் கட்சியினரால் கும்பகோணத்தில் அம்பேத்கர் திருஉருவப்படத்திற்கு விபூதி பூசியவாறு ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டன.

அம்பேத்கர் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் கும்பகோணம் நகரில் இந்து மக்கள் கட்சியினர் சார்பில் விபூதி பூசியவாரும், காவி சட்டை அணிந்தவாரும் அம்பேத்கர் படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. காவி (ய)த் தலைவன் புகழ் போற்றுவோம் என சுவரொட்டியில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

ஏற்கனவே திருவள்ளுவர் சிலைக்கும், பெரியார் சிலைக்கும் காவித்துண்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இதனைப் போலவே தற்போது அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு விபூதி பூசியவாறும் காவிச் சட்டை அணிந்த வாறும் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கும்பகோணம் நகரில் பல்வேறு இடங்களில் இந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்களால் கும்பகோணத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. தெரியாமல் ஒரு குறிப்பிட்ட மதத்தில் பிறந்து விட்டேன். ஆனால் நிச்சயமாக அந்த மதத்தினை சேர்ந்தவனாக சாகமாட்டேன் என்று சூளுரைத்தார் அம்பேத்கர்.

அம்பேத்கரை சிறுமைபடுத்தும் வகையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக அரசியல், சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00