23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த கல்லூரி மூலம் பட்டப் படிப்பு படித்துள்ளனர்... செங்கமலத்தாயார் கல்லூரியில் படித்த மாணவிகள் நல்ல நிலையில் உள்ளதை நினைத்து பெருமைப்படுவதாக புரட்சித்தாய் சின்னம்மா உரை

Jan 24 2023 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரியின் "27வது நிறுவனர் தினம் மற்றும் நுண்கலை வார விழா" நிகழ்ச்சியில் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்றார். சின்னம்மாவுக்‍கு, கல்லூ​ரி நிர்வாகத்தினர் மற்றும் மாணவிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

27வது நிறுவனர் தினம் மற்றும் நுண்கலை வார விழாவில் பங்கேற்பதற்காக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தஞ்சாவூரில் உள்ள அருளானந்த நகர் இல்லத்திலிருந்து மன்னார்குடிக்கு புறப்பட்டார்.

வழியில் திருவாரூர் மாவட்டம் பேரையூர் பகுதியில், கள்ளர் மகா சங்கத்தைச் சேர்ந்த பாண்டி, சிவா ஆகியோர் ஏற்பாட்டில் மகளிர் ஆரத்தி எடுத்தும், பட்டாசுகள் வெடித்தும் புரட்சித்தாய் சின்னம்மாவை வரவேற்றனர். இ​தையடுத்து, சின்னம்மாவுடன் அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது தொண்டர்கள் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்க என்று முழக்கமிட்டனர்.

இதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் பேரையூர் பாலம் அருகே, ஊராட்சிமன்ற செயலாளர் சங்கரின் ஏற்பாட்டின்பேரில், புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு சால்வை வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் சிறப்பாக வரவேற்றனர். பின்னர், தொண்டர்கள் அனைவரும் சின்னம்மாவுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இதனையடுத்து, மன்னார்குடி தமிழ்சாரா சரவணன் ஏற்பாட்டில் மன்னார்குடி பகுதியில் புரட்சித்தாய் சின்னம்மாவிற்கு மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்தும், கழக கொடியுடன், பூரண கும்ப மரியாதை கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது. இருசக்கர வாகனத்தில் தொண்டர்கள் கழக கொடியுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரிக்கு வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு, கல்லூரியின் correspondent டாக்‍டர் ஜெய் ஆனந்த், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கல்லூரி சேர்மன், கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்களும் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கல்லூரியில் இருக்கும் முப்பெரும் தேவியர்களான கலைமகள், அலைமகள், மலைமகள் கடவுள்களை புரட்சித்தாய் சின்னம்மா தரிசனம் செய்தார்.

இதையடுத்து, புரட்சித்தாய் சின்னம்மா என்.சி.சி மாணவிகள் புடைசூழ சிறப்பாக கல்லூரி வளாகத்திற்குள் அழைத்து செல்லப்பட்டார்.

பின்னர், கல்லூரி வளாகத்திலுள்ள அரங்கத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கல்லூரியின் நிறுவனர் செங்கமலத்தாயாரின் திருவுருவப் புகைப்படத்தின் முன் வைக்‍கப்பட்ட குத்து விளக்கை, புரட்சித்தாய் சின்னம்மா ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அலங்கரித்து வைக்‍கப்பட்ட செங்கமலத்தாயாரின் திருவுருவப் படத்திற்கு சின்னம்மா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து விழா நடைபெறும் அரங்கிற்கு சென்ற புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு என்.சி.சி மாணவிகள் வரவேற்பு அளித்தனர். விழா நடைபெறும் இடத்திற்குச் சென்ற சின்னம்மாவுக்‍கு பெண் ஆசிரியர்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விழா அரங்கிற்கு வந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, அங்கு கூடியிருந்து பல்லாயிரக்‍கணக்‍கான மாணவிகள் கரகோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விழா ​மேடைக்‍குச் சென்ற புரட்சித்தாய் சின்னம்மா கல்லூரி மாணவிகளுக்‍கு வணக்‍கம் தெரிவித்தனர். மாணவிகளும் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு வாழ்த்து முழக்கங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் விழா மேடையில் விநாயகர் முன்பு மலர்களால் அலங்கரித்து வைக்‍கப்பட்ட குத்து விளக்கை ஏற்றி சின்னம்மா விழாவை தொடங்கி வைத்தார். பின்னர், அங்கிருந்த கல்லூரியின் நிறுவனர் செங்கமலத்தாயாரின் திருவுருவப் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதன் தொடர்ச்சியாக தீபாராதனை காண்பிக்‍கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, விழா மேடை அருகே நடைபெற்ற கல்லூரி மாணவிகளின் பஜனை நிகழ்ச்சியில் புரட்சித்தாய் சின்னம்மாவுடன் டாக்‍டர் வி. திவாகரன், டாக்‍டர் ஜெய்ஆனந்த் ஆகி​யோர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து, விழா மேடைக்‍குச் சென்ற புரட்சித்தாய் சின்னம்மாவிற்கு கல்லூரி சேர்மன் டாக்‍டர் திவாகரன், சால்வை அணிவித்தும் ஆளுயர ரோஜா மாலையுடன் கேடயம் வழங்கியும் மகிழ்ச்சி பொங்க அவரை வரவேற்றார். அப்போது சின்னம்மாவுடன் அனைவரும் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00