பாலியல் புகாரில் கைதான நாகர்கோவில் பாதிரியார் பெனடிக் அன்றோ மீது மேலும் 4 பெண்கள் புகார்... சென்னை, பெங்களூரைச் சேர்ந்த மேலும் 4 இளம்பெண்கள் ஆன்லைன் மூலம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்

Mar 21 2023 10:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபம் அருகே பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த லிப் லாக் பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது செய்யப்பட்டுள்ளார். பாதிரியார் என்ற போர்வையில் திருமணமான 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இளம்பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பெனடிக் ஆண்டோ குறித்த தற்போது பார்க்கலாம்...

கன்னியாகுமரி மாவட்டம் களியாக்கவிளை அருகே பாத்திமா நகரை சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ, தேவாலயத்துக்கு வரும் பெண்களுக்கு காதல் வலை வீசுவதில் கில்லாடி என கூறப்படுகிறது.

ஏதோ ஒரு கோரிக்கைக்காக தேவாலயத்துக்கு வரும் பெண்களிடம், செல்போன் எண்ணை வாங்கும் பாதிரியார் பெனடிக் ஆண்டோ, கொஞ்சம் கொஞ்சமாக காதல் வலையை வீச ஆரம்பித்துள்ளார்...

என்ன பாதர்...நீங்களா இப்படி என பெண்கள் கேட்டாலும், அடங்காத பெனடிக் ஆண்டோ, வாட்ஸ் அப் வீடியோ காலில் இளம்பெண்கள் பலரை மயக்கி ஏகப்பட்ட போட்டோ மற்றும் வீடியோவை ஸ்கிரீன் ஷாட்டாக எடுத்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. பின்னர் இந்த காட்சிகளை வைத்து சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது....

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற கதையாக மாமாக்குட்டி பெனடிக் ஆண்டோவின் லேப் டாப் யாரோ ஒரு நல்ல மனிதரிடம் வகையாக சிக்கியுள்ளது...

லேப் டாப்பில் இருந்த புகைப்படங்கள், வீடியோவை பார்த்த அந்த நபர், சில புகைப்படங்கள், வீடியோக்களை இணையத்தில் கசியவிட, இணைய உலகம் ஸ்தம்பித்து நின்றது...

இந்த நிலையில் தான் பாதிரியார் பெனடிக் ஆண்டோ மீது பேச்சிபாறையை சேர்ந்த 18 வயது இளம்பெண் பாலியல் புகார் கொடுக்க, சைபர்கிரைம் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பொறியில் சிக்கிய எலியாக தவித்த பெனடிக் ஆண்டோ, காவல்துறைக்கு பயந்து தலைமறைவானார்.

குமரி மாவட்டம் முழுவதும் பாதிரியாரின் லீலைகள் தீயாய் பரவ, தனிப்படை அமைத்து பெனடிக் ஆண்டோவின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தது காவல்துறை...

நாகர்கோவில் பால்பண்ணை பகுதியில் பாதிரியார் பெனடிக் ஆண்டோ பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைக்க தனிப்படை போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்து பெனடிக் ஆண்டோவை கொத்தாக தூக்கி கைது செய்தனர்...

தொடர்ந்து பாதிரியார் பெனடிக் ஆண்டோவை தங்களது ரகசிய இடத்துக்கு கொண்டு சென்ற சைபர் கிரைம் போலீசார், லேப் டாப்பில் கிடைத்த ஆதாரங்களை காண்பித்து அவரை லாடம் கட்டி விசாரித்து வருவதாக கூறப்படுகிறது....

பாதிரியார் கைதானார் என்ற செய்தியை கேட்ட குமரி மாவட்ட மக்கள், நடிகர் விவேக் படத்தில் வருவது மாதிரி பாதிரியாரை எங்கு சுடவேண்டுமோ அங்கு சுடவேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00