எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கடும் கண்டனம்

Mar 24 2023 6:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் அக்கட்சி எம்.பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததன் மூலம், சர்வாதிகாரத்தை நிலை நிறுத்த பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என்பது உறுதியாகியுள்ளதாக கூறியுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்அழகிரி, தனக்கு தானே புதைகுழியை பறிப்பதில் பாஜக மிகத்தீவிரமாக உள்ளதாக விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், ராகுல்காந்தியை பழிவாங்க இந்திய ஜனநாயகத்தின் மீது கொடூரமான தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதாக சாடியுள்ளார்.

இதேபோல், தகுதி நீக்கம் குறித்த தனது கண்டனத்தை பதிவு செய்துள்ள கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, ராகுல் காந்தியை பார்த்து பிரதமர் மோடி பயந்துவிட்டதாக ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

மக்களவைக்கு ராகுல்காந்தி வரக்கூடாது என்பதற்காகவே அவரை தகுதி நீக்கம் செய்திருப்பதாகக் கூறியுள்ள ஜோதிமணி, மோடி அரசை வீழ்த்த ராகுல்காந்தி மீண்டு வருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00