புரட்சித்தலைவி அம்மா வழியில் நிச்சயம் நல்லாட்சி தருவேன் : அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சூளூரை

May 25 2023 5:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டு விட்டதாகவும், அரசு அதிகாரிகள் திமுகவினரால் மிரட்டப்படுவதாகவும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டியுள்ளார்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் செய்தியாளர்களிடம் பேசிய புரட்சித்தாய் சின்னம்மா, எதிர்க்கட்சிகள் தங்கள் இருப்பைக் காட்ட, புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக கூறினார்.

திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துவிட்டதாகவும், அரசு அதிகாரிகள் திமுகவினரால் மிரட்டப்படுவதாகவும் சின்னம்மா குற்றம்சாட்டினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு பயணம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சின்னம்மா, ஏற்கனவே முதலமைச்சர் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு சுற்றுப்பயணத்தால் எந்த பலனும் இல்லை என தெரிவித்தார். ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய அவர், நிறுவனங்கள் நடத்துபவர்களை திமுகவினர் தொந்தரவு செய்து வருவதாக சாடினார்.

கள்ளச்சாராய மரணம் குறித்த கேள்விக்கு, அம்மா ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் இருந்ததில்லை என்றும், திமுக கவுன்சிலர் முதல் மேல்மட்டத்தினர் வரை காவல்துறை மிரட்டப்படுவதாலேயே இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுவதாகவும் சின்னம்மா தெரிவித்தார்.

கட்சியில் தொண்டர்களின் விருப்பம் தான் வெற்றி பெறும் என்றும், தொண்டர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதுதான் நடைபெறும் என்றும் சின்னம்மா தெரிவித்தார்.

வாக்களித்த மக்களை ஏமாற்றி வரும் திமுகவை, வரும் காலத்தில், எங்கு வைக்க வேண்டும் என மக்களுக்கு தெரியும் என்றும் சின்னம்மா கூறினார்.

தமிழகத்தைக் காப்பாற்ற அஇஅதிமுகவால் மட்டுமே முடியும் என்றும், 2024 ல் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திப்போம் என்றும் கூறிய புரட்சித்தாய் சின்னம்மா, வரும் 2024ம் ஆண்டு தேர்தலில் நிச்சயம் மாற்றத்தை காண்பீர்கள் என்றும் உறுதிபட தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00