கும்பகோணத்தில் மஞ்சள் பயிர் அறுவடை பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள விவசாயிகள் : ஒரு கொத்து ரூ. 10 என்ற விலைக்கே வியாபாரிகள் வாங்கி செல்வதால் விவசாயிகள் வேதனை

Jan 13 2024 12:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கும்பகோணம் பகுதியில் மஞ்சள் பயிர் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளான சுவாமிமலை, பட்டீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில்,பல ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மஞ்சள் சாகுபடி நல்ல விளைச்சல் கண்டுள்ளதால், அதனை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மஞ்சளுக்‍கு நல்ல விலை கிடைக்‍கும் என விவசாயிகள் நம்பியிருந்த நிலையில், கடந்தாண்டு ஒரு கொத்து 10 ரூபாய் என விற்பனை செய்யப்பட்ட விலைக்கே இந்த ஆண்டும் வியாபாரிகள் வாங்கிச் செல்வதால், எந்த லாபமும் கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்‍கின்றனர். மஞ்சள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00