நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் கள்ளச்சாராயம், போலி மதுபானத்தின் விளைவுகள் குறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணி : 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் - போலீசார் பங்கேற்பு

Mar 25 2017 6:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் கள்ளச்சாராயம், போலி மதுபானத்தின் விளைவுகள் குறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள், உடலில் ஏற்படும் பாதிப்புகள், உடனடி மரணம் உள்ளிட்டவை குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை மாணவ-மாணவிகள் ஏந்தியவாறு இப்பேரணியில் பங்கேற்றனர். விழிப்புணர்வு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. மேலும், கள்ளச்சாராயம் விற்பனை செய்தல், தயாரித்தல், பயன்படுத்துதல் ஆகிய குற்றங்களுக்கு வழங்கப்படும் சிறை தண்டனை மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பேரணி பள்ளிப்பாளையம், ஈரோடு சாலை, பேருந்து நிலையம் வழியாக சென்று நகராட்சி வளாகத்தில் நிறைவடைந்தது. கல்லூரி மாணவ-மாணவியர், மதுவிலக்கு தடுப்பு பிரிவு காவலர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00