உடல்நலக் குறைவு காரணமாக பிரபல திரைப்பட நடிகர் வினுசக்கரவர்த்தி மரணம் - திரையுலகினர் அஞ்சலி

Apr 28 2017 10:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகர் வினுசக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 74.

தமிழ்த்திரைத்துறையில் கதை, வசனகர்த்தாவாக அறிமுகமாகி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் வினு சக்கரவர்த்தி. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, போன்ற பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள வெஸ்லே பள்ளியில் பயின்ற அவர், பின்னர் பட்டப் படிப்பை முடித்ததும் காவல்துறையில் உதவி ஆய்வாளராகவும், அதனைதொடர்ந்து தெற்கு ரயில்வேயிலும் பணிபுரிந்துள்ளார்.

பின்னர் சினிமா மீது இருந்த ஆர்வத்தில், கன்னட திரைப்பட இயக்குனர் புட்டண்ணா கனகலிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

அதனைத்தொடர்ந்து, ரோசாப்பூ ரவிக்கைகாரி' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் கதை, வசனம் எழுதிய வண்டிசக்கரம் திரைப்படத்தில் பிரபல நடிகை சில்க்ஸ்மிதாவை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து எண்ணற்ற படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் வினுசக்கரவர்த்தியின் நடிப்பு பல திரைப்படங்களில் பாராட்டு பெற்றது.

நடிகர் வினு சக்கரவர்த்தி கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4.30 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் வினுசக்கரவர்த்தியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தென்னிந்திய நடிகர் சங்கம், அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக்கொண்டுள்ளது.

நடிகர் வினுசக்கரவர்த்தி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் இணையதளத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். இதேபோல், பல்வேறு பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00