கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில், தீபா பேரவையைச் சேர்ந்த 500 பேர் கழகத்தில் இணைந்தனர் - கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா மற்றும் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மட்டுமே கழகத்தை வழிநடத்த முடியும் என்று உறுதி

Jun 26 2017 2:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழக பொதுச்செயலாளர் சின்னம்மா அறிவுறுத்தலின்படி, கழக பணியாற்றி வரும் கழக துணைப்பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, தீபா பேரவை நிர்வாகிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் இன்று நேரில் சந்தித்து மீண்டும் தாய்க்கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

கழக பொதுச்செயலாளர் சின்னம்மா அறிவுறுத்தலின்படி, கழக பணியாற்றி வரும் கழக துணைப்பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, கழக நிர்வாகிகள் சந்தித்து வருகின்றனர். சென்னையில் அடையாறில் உள்ள அவரது இல்லத்தில், தீபா பேரவை மாநிலஒருங்கிணைப்பாளர் திரு.ஆலந்தூர் கோபிநாத், தென்சென்னை தெற்கு மாவட்ட தீபா பேரவை செயலாளர் தரமணி ஆர்.கே.குமரேசன், மாநில மகளிரணி செயலாளர் எம்.நிர்மலா, தென்சென்னை தெற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் விஜயா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் இன்று சந்தித்து தாய்க்கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். ஆலந்தூர் பகுதி துணை செயலாளர் லட்சுமிபதி, காஞ்சிபுரம் மாவட்ட அம்மா பேரவை துணைத்தலைவர் எட்வின் ஏற்பாட்டின் பேரில் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்ட தீபா பேரவை நிர்வாகிகள், கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா, அவரது அறிவுரைப்படி செயல்படும், துணைப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் ஆகியோர் மட்டுமே கட்சியை காப்பாற்ற முடியும் என தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00