தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 22 விசைப்படகுகளுக்கு ரூ.25 ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 மாத காலத்திற்கு கடலுக்கு செல்ல தடை விதித்தும் மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவு

Aug 19 2017 6:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 22 விசைப்படகுகளுக்‍கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 மாத காலத்திற்கு கடலுக்‍கு செல்ல தடை விதித்தும் மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மீன்வளத்தை அழிக்‍கும் இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்‍க தடை விதித்து அரசு ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், ராமேஸ்வரம் பகுதியில் இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக மீன்வளத்துறையினருக்‍கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 22 விசைப்படகுகளில் மீனவர்கள் இரட்டைமடி வலைகளை பயன்படுத்தியது தெரிய வந்தது. இந்நிலையில், 22 விசைப்படகுகளின் உரிமையாளர்களுக்‍கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், விசைப்படகுகளுக்‍கு கிடைக்‍கும் மானிய டீசலை ரத்து செய்தும், 3 மாத காலத்திற்கு 22 விசைப்படகுகளும் கடலுக்‍கு சென்று மீன் பிடிக்‍க கூடாது என்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்திய - இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்‍கட்டையாக இருக்‍கும் இரட்டை மடி வலைகளை பயன்படுத்தும் மீனவர்களுக்‍கு தமிழக மீன்வளத்துறையினர் அறிவித்துள்ள இந்த அபராதம் ராமேஸ்வரத்தில் உள்ள சக மீனவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00