கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : அணையில் இருந்து வினாடிக்கு 9,721 கனஅடி தண்ணீர் திறப்பு - தென்பெண்ணையாற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Oct 16 2017 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையில் இருந்து வினாடிக்கு ஒன்பதாயிரத்து 721 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தென்பெண்ணையாற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு 9 ஆயிரத்து 721 கன அடியாக உள்ளது. ஏற்கெனவே அணை நிரம்பியுள்ள நிலையில், பாதுகாப்பு கருதி, அணையின் பிரதான நான்கு மதகுகள் வழியாக, வினாடிக்கு 9 ஆயிரத்து 721 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கே.ஆர்.பி. அணைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் பெய்து வரும் கனமழையால், ஆண்டியப்பனூர் அணை நிரம்பி வழிகிறது. ஜவ்வாது மலையையொட்டியுள்ள இந்த அணைக்கு, கொட்டாறு, பாம்பாறு ஆகிய ஆறுகளின் வழியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து, அணையிலிருந்து 600 கனஅடி நீர் வெளியாகிறது. இந்த நீர், ஊத்தங்கரையில் உள்ள பாம்பாறு அணைக்குச் செல்கிறது. இதனைக்காண, ஏராளமான பொதுமக்கள் வந்தவண்ணம் உள்ளனர். விடுமுறை தினமான நேற்று, சிலர் குடும்பத்துடன் வந்து பார்வையிட்டனர். 216 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அணை, பல வருடங்களுக்குப் பிறகு நிரம்பியதால், விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00