டெங்கு நோய் விழிப்புணர்வு : கோவையில் தங்க நகை தொழிலாளி, ஏடிஸ் பெண் கொசுவை பட்டாசுகளால் வடிவமைத்து இறப்பது போல் காண்பித்துள்ளார்

Oct 17 2017 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தங்க நகை தொழிலாளி ஒருவர், டெங்கு நோய்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நோயைப் பரப்பும் ஏடிஸ் பெண் கொசுவை, பட்டாசுகளால் வடிவமைத்தும், அது இறப்பது போன்றும் செய்து காண்பித்துள்ளார்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தங்க நகை தொழிலாளி திரு. ராஜா என்பவர், மைக்ரோ அளவில் தங்கத்திலான கிரிக்கெட் பேட், தலைவர்களின் உருவங்களை சிறிய சிற்பங்களாக செய்தும், சுற்றுச்சூழல் சம்பந்தமான விழிப்புணர்வுகளை கலையின் மூலம் வெளிப்படுத்துவது என பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுவை பட்டாசுகளால் வடிவமைத்திருக்கிறார்.

தமிழகத்தில், டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதை அடுத்து, இந்த ஆண்டு தீபாவளி டெங்கு தீபாவளியாக மாறியிருக்கிறது. டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஏடிஸ் கொசுவை பட்டாசுகளால் வடிவமைத்தும், ஊசி முனையில் ரத்தம் கசிய கொசு இறப்பது போன்றும் திரு. ராஜா தயாரித்துள்ளார். மேலும் "கொசுவின் முட்டைகள், வெடிக்கும் அணுகுண்டுகளைவிட அபாயகரமானது. கொசுவை ஒழிப்போம் டெங்கு வராமல் தடுப்போம்" என்ற வாசகங்களோடு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00