இந்திய தேர்தல் ஆணையத்தில், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை - எடப்பாடி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் ஏராளமான போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக கழகத்தின் சார்பில் வாதம் : தேர்தல் ஆணையம் முழுமையாக ஆய்வு செய்து முடிவெடுக்க வலியுறுத்தல் - அடுத்த விசாரணை, வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Oct 17 2017 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய தேர்தல் ஆணையத்தில், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் ஏராளமான போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக கழகத்தின் சார்பில், ஆதாரங்களுடன் வாதிடப்பட்டது. தேர்தல் ஆணையம் இதனை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே முடிவெடுக்க வேண்டும் என்றும் கழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு, தேர்தல் ஆணையத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கழகத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் திரு. அஸ்வினிகுமார் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் போலி ஆவணங்களையும், பிரமாணப் பத்திரங்களையும் தாக்கல் செய்துள்ளதாக, கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்பேரில் செயல்படும் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் சார்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுமீது விசாரணை நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தாக்கல் செய்துள்ள போலி ஆவணங்கள் அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்யவேண்டும் - இதுதொடர்பாக கழகத்தின் சார்பில் சாட்சியங்கள் அளிக்க முன்வந்துள்ள சாட்சிகளிடம் விசாரணை நடத்தவேண்டும் - கழக உறுப்பினர்கள் பலரை மிரட்டியும், பலவந்தப்படுத்தியும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் போலியான பிரமாணப் பத்திரங்களை தயாரித்து தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளதால், இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்திய பின்னரே இரட்டை இலைச் சின்னம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என, கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, எதிர்தரப்பு வாதங்களையும் கேட்ட, தேர்தல் ஆணையம், அடுத்த விசாரணையை, வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. நேற்றைய விசாரணையின்போது, கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தகுதி நீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத்தின் முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00