குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் பரவலாக மழை பெய்து வருவதால் பட்டாசு விற்பனை மந்தம் : பட்டாசு விற்பனையாளர்கள் வேதனை

Oct 17 2017 1:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் பரவலாக மழை பெய்து வருவதால், பட்டாசு விற்பனை மந்தமடைந்திருப்பதாக பட்டாசு விற்பனையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னையில் தீவுத்திடல், நந்தனம், ராயப்பேட்டை ஓய்எம்சிஏ மைதானம், அண்ணாநகர், கோயம்பேடு உள்ளிட்ட 5 இடங்களில் தீபாவளி பட்டாசு விற்பனை நடைபெற்று வருகிறது. சென்னையின் மிகப்பிரதான பட்டாசு விற்பனை மையமாக விளங்கும் தீவுத்திடலில், இந்த ஆண்டு 60 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கடைகள் அனைத்திலும் தீ தடுப்பு அணைப்பான்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள், கடைகளின் எண்ணிக்கையால், மக்களின் வரவேற்பு பெற்ற இடமாக தீவுத்திடல் உள்ளது.

புதிய வரவுகள் இந்த ஆண்டு விற்பனைக்கு வந்துள்ளதாகவும்,ஜி.எஸ்.டி வரியால் பட்டாசு விலை சற்றே உயர்ந்திருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஜிஎஸ்டி வரி விதிப்பால் பட்டாசு விற்பனை 47 சதவீதம் குறைந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் மழை பெய்து வருவதால் பட்டாசு விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00