கடலூருக்கு ஆளுநர் வருகை - அவசர அவசரமாக போடப்படும் தரமற்ற சாலை : பொதுமக்கள், மாணவர்கள் கடும் இன்னல்

Dec 15 2017 1:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர் மாவட்டத்திற்கு ஆளுநர் வருகை தந்துள்ளதை அடுத்து, அவசர அவசரமாக சாலைகள் போடப்படுவதால் மாணவர்களும் பெற்றோர்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.

கடலூரில் கடந்த ஆறு மாத காலமாக சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி தினம்தோறும் விபத்துகளை சந்தித்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருசில தினங்கள் மட்டுமே பெய்த வடகிழக்கு பருவ மழையினால், சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்து சாலைகளே இல்லாத நகராமாக காட்சியளித்தது. இதுகுறித்து சமூக நல அமைப்புகள், மற்றும் பல கட்சிகள் பலகட்ட போராட்டம் நடத்தியும் மவுனம் சாதித்து வந்த மாவட்ட நிர்வாகம், தற்போது கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க தமிழக ஆளுநர் வந்துள்ளதையொட்டி, அங்கு அவசர அவசரமாக சாலைகள் போடும் பணியில் ஈடுபட்டது. ஆளுநர் வருகையையொட்டி கடலூரில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை அவசர அவசரமாகவும், தரமற்றதாகவும் பேப்பர் கனத்திற்கு பேட்ச் போடும் பணிகள் நடைபெறுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பள்ளி, கல்லூரி முடியும் நேரத்தில் சாலைகளை ஆக்கிரமித்து சாலை பணியில் ஈடுபடுவதால் பள்ளிக்கு சென்று வரும் குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00