'புதிய பார்வை' ஆசிரியர் ம. நடராசனின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அஞ்சலி

Mar 21 2018 3:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சையில் வைக்‍கப்பட்டுள்ள 'புதிய பார்வை' ஆசிரியர் ம. நடராசனின் உடலுக்‍கு, அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னையில் காலமான "புதிய பார்வை" ஆசிரியர் ம.நடராசனின் உடல், தஞ்சாவூர் அருளானந்த நகர் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. ம.நடராசனின் உடலுக்‍கு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல். திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், தமிழ்மாநில முஸ்லீம் லீக்‍ கட்சித் தலைவர் திரு. ஷேக்‍ தாவூத், உலக தமிழர் பேரவையின் தலைவர் திரு. பழ.நெடுமாறன், தமிழ்நாடு பார்வர்டு பிளாக்‍ கட்சியின் பொதுச் செயலாளர் டாக்‍டர் கணேசன், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் திரு. வேட்டவலம் மணிகண்டன் உள்ளிட்ட தலைவர்களும், இயக்‍குநர்கள் திரு. மனோஜ்குமார், திரு. சற்குணம் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்‍களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ் மீது பற்று கொண்டு திராவிட இயக்‍கத்தில் முக்‍கிய பங்காற்றியவர் என தலைவர்களும், பிரபலங்களும் புகழாரம் சூட்டினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00