குரங்கணி வனத்தீயில் சிக்‍கியவர்களின் பலி எண்ணிக்‍கை 18 ஆக உயர்வு - விபத்துக்‍கான காரணம் குறித்து விசாரணை தொடக்‍கம் - அதிகாரிகள் ஆய்வு

Mar 22 2018 1:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேனி மாவட்டத்தில் தீ விபத்துக்‍குள்ளான குரங்கணி மலைப்பகுதியில் விசாரணை அதிகாரிகள் தற்போது நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விபத்தில் சிக்‍கி சிகிச்சை பெற்று வந்த ஜெயஸ்ரீ என்ற பெண் இன்று உயிரிழந்ததால், பலி எண்ணிக்‍கை 18ஆக அதிகரித்துள்ளது.

போடிநாயக்‍கனூர் அருகேயுள்ள குரங்கணி மலைப்பகுதியில் கடந்த வாரம் மலையேற்றப் பயிற்சிக்‍குச் சென்ற ஒரு குழுவினர், அங்கு ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்‍கினர். இந்தச் சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான நீதி விசாரணைக்‍கு உத்தரவிடப்பட்டதை அடுத்து, நீதிபதி திரு.அதுல்யா மிஸ்ரா தலைமையிலான குழுவினர், தற்போது சம்பவப் பகுதிக்‍குச் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். குரங்கணி, டாப் ஸ்டேஷன், கொழுக்‍குமலை, ஒற்றைமரம் போன்ற இடங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், குரங்கணி பகுதி மக்‍களிடமும் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.

இதனிடையே, குரங்கணி தீ விபத்தில் சிக்‍கி கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயஸ்ரீ என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதன்மூலம் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்‍கை தற்போது 18ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00